skip to main | skip to sidebar

Experience - The invincible wealth

A portfolio - collection of shades of my life

Tuesday, June 29, 2010

..::கடைசியில இதப் போய் எழுத வச்சுட்டாங்ய்களே ::..


அட என்னடா ப்ளொக் அ ஓப்பன் பண்ணி சும்மா வச்சிருக்கலாமின்னு பாத்தா பசங்க எல்லாம் செமையா எல்லாரும் கடுப்பாகிறாய்ங்க....

நம்ம கான்செப்ட்டே இவனுகளுக்கு புரியலே...நாம எப்ப பிசியா இதெல்லாம் எழுதியிருக்கோம். கடைசியில இப்பத்தான் புரியுது ஏன் இதெல்லாம் எழுதிறாங்கன்னு....எல்லாமே அவிக பட்ட கஷ்டங்கள்தான் இப்படி ப்ளொக்ல அருவியாக் கொட்டுது...


சரிதான் போ...இவங்களுக்கு வேலை வெட்டி இல்லன்னு நினைச்சன்...கடைசியில நானும் எழுதலாமின்னு முடிவு பண்ணிட்டன். கதை ஒன்னும் புதுசு இல்ல...எல்லாம் காலம் காலமா நாம பண்ணிக்கிட்டிருக்கற பிட்டடிக்கிற தொழில்தான்....
அதுலயும் பாருங்க நம்ம பசங்கதான் இதுல எப்பவுமே பெஸ்ட்டு....எக்ஸாமுக்கு முதல் கிழமையில இருந்தே ஸ்டார்ட் பண்ணிடுவாங்க...பிட்டடிக்கிறதின்னா அவ்ளோ லேசுப்பட்ட விசயம் இல்ல. அதுக்கு நெறைய ஸ்டெப்ஸ் இருக்கு

1. எந்த எந்த பாடத்துக்கு பிட்டு இருக்குன்னு கண்டு பிடிக்கனும்

2. பிட்டுக்களை bit பேப்பரில் எழுதி எடுக்கோனும்..அதுலயும் மெயின் மாட்டர் பிட்டுக்கெல்லாம் தனித்தனி unique name குடுக்கோனும்..என்னமோ ஜாவா ல ப்ரோக்ராம் பண்ற மாதிரி....

3. சரி பிட்டைத்தான் ரெடி பண்ணியாச்சேன்னு பாத்தா...அடுத்த ஸ்டெப்புத்தான் இருக்கிறதுலயே ரொம்ப critical ஸ்டெப்பு....அதான்பா....பிட்டுக்களை அது அதுகள்ட லொக்கேசனுக்கு அனுப்புறது...இங்கதான் எங்கட பெடியங்கள்ட எக்பீரியன்ஸ் வொர்க் பண்ணும்...
சாதாரணமா, கொஞ்சமா பிட்டடிக்கிறவன் பிட்டை சாக்ஸ்சுக்குள்ளயோ...இல்ல டிரவுசர் பெல்ட் மாட்டற ஏரியாக்குள...இல்ல பனியனுக்குள்ள...அமுக்கி கொண்டு வந்துருவான்
ஆனா பிட்டையே கடவுளா நம்பி வாறவன் இருக்கான் அல்லோ....அவன்ட மூளை யோசிக்கும் பாரு ஒரு யோசனை....ஏகநங் கியலா வடக் நா (அதான் பாஸ், சொல்லி வேலை இல்லே) அவன் மண்டையில எப்டித்தான் அந்த ஸ்பாட்டுகளை லாக் பண்றானோ தெரியலை...கழுதை கண்ட கண்ட இடத்துல எல்லாம் ஒழிச்சு வக்கிறது மட்டுமில்லாம , எக்ஸாம் ஹோல்ல அத அங்க இருந்து லாவகமா உருவி பாத்தடிச்சிட்டு....“யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்டு தத்துவமெல்லாம் பேசிக்கிட்டு அத மத்தவங்களுக்கும் குடுத்துவாங்க நம்ம பசங்க....

இதுல நான் கண்ட இன்னொரு மாட்டர்...இப்படித்தான் ஒரு பய- நம்ம ப்ரெண்டுதான்..பிட்ட எழுதி மர்மப் பிரதேசத்துக்குள்ள மறைச்சு வச்சு எடுத்து வந்திருக்கான்...தான் பிட்டடிச்சுட்டு பக்கத்துல கேட்டவனுக்கும் குடுத்திட்டான். கருமம் பிட்டடிக்கிற ஆர்வத்துல பிட்ட வாங்கின பய புள்ள...பிட்டடிச்சிட்டு சேர் வாராரு என்டு பிட்டை சப்பி விழுங்கிட்டான்....உவ்வே....வெளிய வந்து தான்அந்த சனியனுக்கு தெரிஞ்சது , பிட்டு எங்க இருந்து வந்ததென்டு....எடுத்தான் பாரு ஒரு சத்தி அந்த நேரத்துல...அத மறக்கவே முடியாதுங்க...

இவனுக தான் இப்படி என்டால் எங்கட பொம்பிளைப் பிள்ளைகள் இருக்குது தானே...எல்லாமே சொக்கத்தங்கங்க....பிட்டடிக்கிறதுன்னா ஏதோ கொலைக்கேசுல மாட்டிப்பட்ட மாதிரி சீனப் போடுவாளுக....அப்பறமா மாட்டுப்பட்ட பிறகுதான் தெரியும்....அப்பக் கூட பாக்கனுமே அவளுக மூஞ்சிகள..என்னமோ கண்ணகிக்கு அப்பறம் தாங்கதான் பத்தினிக மாதிரியே முகத்தை வச்சுப்பாளுங்க...

சரி சரி....என்னடா இதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்டு பாக்கிறீங்களா....இப்படி பிட்டடிச்சு வாழறது ஒரு குறூப்புட ஸ்டைல் என்டால்..இவனுக அடிச்சத கேட்டடிக்கிற குறூப்புத்தான் நாங்க....சும்மாவா சொன்னாங்க ...பிச்சை எடுத்தாறாம் பெருமாளு, அதப் புடுங்கித் தின்னாறாம் அனுமாரு...ஆமா அந்த குரங்குப்பயலுவ தானே நாங்க...அப்புறம் என்ன மரியாதை வேண்டிக்கிடக்குது...

இப்படித்தாங்க, நேத்தும் கூட இதே மாதிரி ஒரு try போட்டன்...நான் ஒன்னும் சும்மாப்பட்ட ஆளு இல்லங்க...சொன்னா நம்ப மாட்டீங்க 3ம் ஆண்டிலயே கொப்பி மாத்தி answer எழுதினவங்க நாம....அப்பறமா 5ம் ஆண்டுல...ம்ஹீம் ....அப்டியே பழகிப் போச்சு....தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்டதுக்கு நாமதான் கிரேட் எக்ஸாம்பிள்...பாத்தடிச்சா மட்டும் பத்தாது மாட்டினாத்தானே கதைக்கு interest என்டு அடிக்கடி மாட்டுப்பட்டும் இருக்கோம்....(ஹிஹி நீங்க நினைக்கிறது விளங்குது...பய மாட்டுப் பட்டுட்டு என்னமா சமாளிக்கிறான்னு,...உண்மைதான் சமாளிச்சுதானே ஆகோனும். நாங்க என்ன அரிச்சந்திரன்ட கடைசி வாரிசுகளா இல்லதானே...அப்புறம் ஏன் கவலைப்பட) மாட்டின உடனே இன்குவாரிகளும், டிஸ்மிஸ்சல்களும்....விடுப்பா விடுப்பா...தேவை இல்லாம பழசுகளை கிழறிக்கிட்டு....
இது கூடப் பரவாயில்லை....இதுக்கெல்லாம் மேல ஒருத்தன் இருக்கான் தானே....எங்கட கோட் ஃபாதர்...அதான்ங்க எல்லாத்துக்கும் answer டிஸ்ட்ரிபூட் பண்றவன்...பொதுவா கம்பஸ்ல அவனுகள specimen maker னு சொல்லுவோம்....இல்லாட்டி தல, தல ன்னு தல மேல தூக்கி வச்சுக் கொண்டாடுவோம்....( இல்லாட்டி தரமாட்டாங்களே...ஒரு ஸ்டெப் இறங்கினாத்தானே 2 ஸ்டெப் போர்வார்ட் பண்ற முடியும்)

இப்படித்தாங்க....நேத்தும் கூட ஒரு நண்பன்...இல்ல இல்ல....ஒரு நண்பன் என்ட பெயருல ஒரு ....ம்ம்...வேணாமே அப்பறம் அடுத்த எக்ஸாமுக்கு answer தரமாட்டான்....ஒரு கோட் ஃபாதர்களுல ஒருத்தன்னு வச்குங்களேன்....
மச்சான்...காப்பாத்துடா என்டு அந்த 1 hour எக்ஸாம் டைம்மிலயும் கெஞ்சிக் கூத்தாடி ஆன்சர் கேட்டன்...தந்துட்டான்... அப்புறம் சொல்லவா வேணும் எங்கள பத்தி...என்னமோ நாங்கதான் பேப்பர செட் பண்ணின ஆக்கள் மாதிரி ஒரு “கெத்“ ஓட எழுதி தள்ளிட்டமுல்ல....அதுலயும் பாருங்க ஆன்சர் தந்தவன் மாட்டப்பட்டுடக் கூடாதேன்ன ஒரு நல்லெண்ணத்துல ஆன்சர modify பண்ணித்தான் எழுதுவோம்...எல்லாம் ஒரு நல்லெண்ணம்தான் ( எங்களுக்கு தானே தெரியும்..மாத்தியெழுதாட்டி ரெண்டையும் நோட்டீஸ் போர்ட்ல போட்டுடு வாங்கன்னு)
ஒரு மாதிரி அடி புடிப்பட்டு....ஸ்பை வேலையெல்லாம் பாத்து...நடுவில இருந்த “சி“னாட்ட கெஞ்சிக் கேட்டு ( இல்லாட்டி மாட்டிப்புடுவாய்ங்க...கேட்டா அவங்க ரொம்ப ஸ்டிரிக்ட்டாம்) ஒரு மாதிரி ஆன்சரை வாங்கி அடிச்சுட்டேன்...அட அதிசயம் என்னான்னா 1 hour எக்ஸாம்ல ஒரு 5 நிமிசம் முன்னாடியே முடிச்சுட்டன்...நிமிர்ந்து பாத்தா மத்தப்பயலுக எல்லாம் அப்பவும் என்னமோ எழுதிக் கொண்டு இருந்தாங்க...மனசுக்குள்ள அப்படி ஒரு சந்தோசம்...ஆஹா அப்போ இந்த எக்ஸாம் நாமதான் டாப்புன்னு....ஒரு மாதிரி முடிச்சு குடுத்து வெளிய வந்தாச்சு...

அப்பத்தான் நம்மட சகுனிக்கூட்டங்கள் பிரச்சனையத் தொடங்குவாங்கள்...மச்சான் அந்தக் கேள்விக்கு என்னடா விடை...( எந்தக் கேள்வி என்டு கூட சொல்ல மாட்டாங்கள்)..அட நீங்க யோசிக்கிறது விளங்குது...உங்க மைன்ட் வாய்ஸ்ச நான் காட்ச் பண்ணிட்டன்...கேட்டது எங்கிட்ட இல்லீங்க...வேற உண்மையா செஞ்ச பசங்ககிட்ட....அப்பத்தான் ஒருத்தன் என் தலையில ஒரு கிலோ அணுகுண்டை தூக்கி வீசினான்....
அந்த ஒருத்தன் யாருமில்ல..எனக்கு விடை தந்த அந்தப் புண்ணியவான்தான்...

”மச்சான், இப்பத்தான்டா பாத்தனான்...கேள்வியெல்லாம் டெலிகொம் மனிசி ஒரேமாதிரிதான் போட்டிருக்கு...values அ மட்டும் மாத்திப்புட்டாளுடா...”


நான் அப்டியே ஷாக் ஆயிட்டேன்....மிஸ்டர்.பீன் ல அவர் அந்த அழுகிய மட்டிய தின்டுட்டு, அது அழுகினது என்டு சொல்லக்குல அவருக்கு மாத்திரம் ஒரு ஜூம் வைப்பானுகள்ல அப்புடித்தான் இருந்திச்சு எனக்கு....

நாசமாப் போனவன்...இத அந்த கடைசி 5 நிமிசத்துல சொல்லியிருந்தா நானும் மாத்தியிருப்பன் தானேடா.....நான்தான் தப்பு பண்ணிட்டேன்....ஸ்டார்ட்லயே சொன்னா அந்த லெச்சரர் ,“யாரும் பாத்தடிக்காதீங்க....ஈஸியா கண்டு பிடிச்சுருவேன்”னு....நாங்க நம்பலியே...நல்லது சொன்னா எவன்டா நம்புறீங்க...
கேட்டா ”இவ என்ன பெரிய லேடி ஜேம்ஸ்பாண்ட்டா”ன்னு கேக்கறவன கேலி பண்றது.... ஒட்டு மொத்தமா என் தலையில இடி விழுந்திட்டு...

ஏற்கனவே நம்மட பெயர் டிப்பார்ட்மண்ட்ல பெரிய தலை ஒன்டுட்ட மாட்டுப்பட்டு, சிக்கி, சின்னா பின்னமாப் போய்....ஏதொ கிடக்குல மிச்ச சொச்சத்தையும், சொச்ச மிச்சத்தையும் ஒட்டி திரும்பி எழும்பி நின்டா....மரத்துல இருந்து விழுந்தவனை மந்தை ஏறி மிதிச்ச கதையா ஆயிட்டு என்ட நிலைமை.....

ஆனா ஒன்னுங்க...அப்பக் கூட கடைசியா அவன் ஒரு வார்த்தை சொன்னான்....”சாரிடா மச்சான்...அடுத்த முறை கேள்வியையும் சேத்துத்தாரன்” என்டு...அப்பத்தான் விளங்கிச்சு....இவனுக்கு நான் அந்த டிப்பார்ட்மண்ட படிக்கிறது புடிக்கலன்னு...

என்னமோ உயிர் தப்பி இதுவரைக்கும் இருக்கன்....பாப்பம் என்னதான் நடக்கப் போகுதின்னு....

Posted by Bruce at 5:52 AM 0 comments

Friday, April 23, 2010

Hi Guys !

I'm a newbie to blogging society. I wish to put my own handmade stuff like my experiences in my life, interesting events, eye-catching pictures and unforgettable things in tamil and english. Writing a blog has never been easy for a beginner like me, but I am going to give it a try. I hope you would enjoy reading my blog entries.
Posted by Bruce at 12:12 AM 0 comments
Newer Posts » Home
Subscribe to: Posts (Atom)

Blog Archive

  • ►  2011 (1)
    • ►  May (1)
  • ▼  2010 (2)
    • ▼  June (1)
      • ..::கடைசியில இதப் போய் எழுத வச்சுட்டாங்ய்களே ::..
    • ►  April (1)
      • Hi Guys !

About Me

My photo
Bruce
Just a person interested in writing blogs for fun in the leisure time...
View my complete profile

Blog Archive

  • ► 2011 (1)
    • ► May (1)
  • ▼ 2010 (2)
    • ▼ June (1)
      • ..::கடைசியில இதப் போய் எழுத வச்சுட்டாங்ய்களே ::..
    • ► April (1)
      • Hi Guys !

Followers

 
Copyright © Experience - The invincible wealth. All rights reserved.
Just Be Yourself