என்னடா திடீர்ன்னு வாரான், திடீர்ன்னு போஸ்ட் பண்றான் ன்னு டென்சன் ஆயிராதீங்க....என்னதான் டைம் கிடைச்சாலும் உருப்படியா எழுதுறதுக்கு ஒன்னுமே கிடைக்குதில்லையே....இப்ப கூட ஒன்டும் உருப்படி இல்லை.....ஏதோ கொஞ்சம் எனக்கு தெரிஞ்சத Share பண்ணலாம் ன்னு பாக்கிறன்...ஹாஹா, தலைப்பைப் பாத்ததும்
பெரிசா ஒன்னும் கற்பனை பண்ணிக்காதீங்க, இது just எனக்கு தெரிஞ்ச சில பெண்களின் தொகுப்பு. கொஞ்சம் நிஜம், மிச்சம் பொதுவானது. நான் பார்த்த சில பெண்கள் பற்றிய ஒரு பதிவு இது.
அவங்கள்ல பொதுவா எப்பிடிப் பாத்தாலும் ஒரு சில வகைக்குள்ள அடக்கிடலாம். குறூப் ஒன்று, ரொம்ப அமைதியான, அழகான பொண்ணுங்க....அடடே இராமயணம் சீரியல்ல வார சீதை மாதிரியே அமைதியா இருக்குதேன்னு எல்லார் கண்ணும் படற மாதிரி இருக்குங்க. அழகுன்னா அப்டியே ”சிவாஜி” ஸ்ரேயா ரேஞ்ச்சுல யோசிக்கப்படாது, ஏன்னா எல்லாப் பொண்ணுங்களுமே ஒரு வகையில அழகுதான்...அழகுங்கறது பாக்கறவன் கண்ணுலதான் இருக்குயொழிய வேற ஒன்டுலயும் இல்லை.

ஆனா அழகுலயும், அமைதியிலயும் கூட ரெண்டு வகை இருக்கு...ஒரு கேஸ், அநியாயத்துக்கு அமைதியா இருக்கும்...வாயில விரல் வச்சாலும் கடிக்கத் தெரியாது, வெளுத்து வச்ச பால் மாதிரி இருப்பாங்க....சிம்பிளா சொல்லனும்னா அப்பாவிங்க...இந்த மாதிரி பொண்ணுங்கள இந்தக் காலத்துல கண்டு பிடிக்கிறது ரொம்ப கஷ்டம்....நூத்துல ஒன்னு தான் இது மாதிரி அமையும்...இந்த மாதிரி பொண்ணுங்கள எல்லாருக்கும் பிடிக்கும்..ஆனா யாரும் இவங்களுக்கு பெரிசா try போட மாட்டாங்க...சிலவேளை இப்படிப் பொண்ணுங்கள எப்டியாச்சும் அமைக்கனும் என்டு கங்கணம் கட்டி அலையற பசங்களும் ஊரில இருக்கத்தான் செய்றாங்க...
அடுத்த கேஸ் இருக்குதே அது புயல் வாரதுக்கு முதல் சூழல் அமைதியா இருக்கும் என்டுவாங்களே, அது மாதிரி இருக்கும்...இந்த மாதிரி பொண்ணுங்க தான் ரொம்ப Dangerous Cases...ஒரு 50kg Atom பாம் மாதிரி இவங்க....எப்போ அமைதியா இருப்பாங்க...எப்போ வெடித்து பீதியக் கிளப்புவாங்கன்னு யாருக்குமே தெரியாது....பொதுவா இந்த காதல் பிரச்சனைகள்ல சிக்கி தள்ளாடுறது இந்த டைப் பொண்ணுங்கதான்....ஏன்னா இவங்க எப்போ சேருவாங்க...எப்போ பிரிவாங்கன்னு அவங்களுக்கே தெரியாது...எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் இந்த வகைப்பொண்ணுங்க தான் கூட, இது மாதிரியான பெண்களை தேடித் தேடி கடைசி வரைக்கும் காதலிச்சு, காதலிக்க வச்ச பல ரோமியோக்களை நான் பாத்திருக்கேன். அதுல பல பேர் இன்னும் சந்தோசமாத்தான் இருக்காங்க....So நீங்க Risk taker என்றால் நம்பி இறங்கலாம். கிடைச்சா கோன் ஐஸ், கிடைக்கலைன்னா கப் ஐஸ் ன்னு இருந்தா ப்ராப்ளமே இருக்காது.

அடுத்ததா பாத்தோம்ன்னா, ரொம்ப Showy ஆன பெண்கள்....சும்மா சொல்லக் கூடாது, பல பசங்கள்ட இதயத்தைக் கொள்ளையடிக்கிறது இவங்க தான்...எந்தப் பசங்களுக்குத்தான் அழகான ராட்சஸியப் பிடிக்காது....அப்பிடி ஒரு ஆத்தலா டிரெஸ் பண்ணிக்கிட்டு...வாற ஐந்தரையடி ஐஸ்கிறீம யாருக்குத்தான் பிடிக்காது...இவங்கள்லயும் சுமாரா ரெண்டு Variety இருக்கு....
ஒன்னு ரொம்ப ராங்கியானா பொண்ணுங்க...இவங்க நடை, உடை, பாவனை எல்லாமே மிடுக்கா இருக்கும்...இவங்களுக்கு பசங்கள தங்களுக்கு பின்னாடி சுத்த விடுறது ரொம்ப பிடிக்கும், அதுக்காகவே ப்ளான் பண்ணிக்கிட்டு திரியிற மாதிரி இருக்கும் இவங்கட நடவடிக்கையெல்லாம்...இவங்களுக்கு காதல் லாம் சும்மா காத்தாடி விடற மாதிரி...சீசனுக்கு சீசன் மாறிக்கிட்டே இருக்கும்....சிலவேளை சீரியஸா லவ் பண்ணுவாங்க...சிலவேளை ”ஃபன்”னுக்கு பண்ணுவாங்க...சிலவேளை சும்மா டெஸ்ட் பண்ணிப்பாக்கறதுக்காத லவ் பண்ணுவாங்க....இவங்க கூட சேர்ந்தா என்னாகும்ன்னு யாருக்குமே தெரியாது...இவங்கள்ட மாட்டுப்பட்டு சிக்கிச் சின்னாபின்னமாகி சிக்கன் 65 ஆன பசங்களும் இருக்காங்க...அதுக்கு opposite ஆ இவங்களோட சேர்ந்து இவங்களை சமாளிச்சு எங்கூரு சரித்திரத்துல இடம் எடுத்தவங்களும் இருக்காங்க...
அடுத்தது இது மாதிரி வெளிப்படையான பொண்ணுங்க....ஆனா மத்தப் பொண்ணுங்கள மாதிரி மெத்தனமா இருக்க மாட்டாங்க...ரொம்ப நேரடியா இருப்பாங்க...எதையும் Straight forward ஆப் பண்ணுவாங்க....எல்லாத்தையும் யோசிச்சு நிதானமா பண்ணுவாங்க..ரொம்ப பெண்ணியம் பேசுவாங்க...ஒரு வகையில சொல்லனும்னா...பாரதி தேடின பொண்ணு மாதிரி ன்னு சொல்லலாம்...Male Chauvinism இல்லாத ஆள் நீங்கன்னா...உங்களுக்கான Ideal choice இவங்கதான்....கண்ணை மூடிட்டு இறங்கலாம்...ஏன்னா அவ்ளோ உறுதியா உங்களுக்கு முடிவு கிடைக்கும்....என்ஜாய்.
கடைசியா ஒரு வகை இருக்குது...அவங்கள எதுல சேக்கிறதென்டே சொல்ல ஏலாது...தங்களப் பத்தி தாங்களே உயர்வா எண்ணிக்கொண்டு எல்லாதயும் தப்புத்தப்பா செய்யறவங்க இருக்கிறாங்க....பெண் சுதந்திரம் ரொம்பக் கூடினா என்னாகுங்கறதுக்கு இவங்க நல்ல உதாரணம்....ஆணுக்கு பெண் நிகர் என்டு சொன்னாலும் சொன்னாங்க....இவங்கட அட்டூழியம் தாங்க ஏலாது...அப்டி இருப்பாங்க...இவங்களுக்கு காதல் லாம் டைம் பாஸ்...ஒரு சிலபேர் இது மாதிரி இருக்கிற பசங்களோட செட் ஆகி நல்லா இருக்கிற மாதிரிதான் திரிவாங்க...ஆனா அவங்கட முடிவுதான் எங்க எல்லாருக்கும் தெரியுமே...சரிங்க...இவ்ளோதான் எனக்கு தோணிச்சுது....இத விடப் பல வகை இருக்கென்டு எனக்கும் தெரியும்....ஆனா என் வாழ்க்கையில இந்த வகைகளைத்தான் இது வரைக்கும் பாத்திருக்கன். கொஞ்சம் Deep ஆ தோண்டி எழுதலாம் என்டுதான் தொடங்கினேன்...ஆனா ஒரு safety க்காக குறைச்சிட்டன்...ஹிஹி. So நான் என்ன சொல்றேன்னா, உங்களுக்கேத்த மாதிரி சின்னனோ, பெரிசோ....ஈயமோ, பித்தளையோ நல்லதா ஒன்னை அமைக்க கட்டாயம் முயற்சி பண்ணிப் பாருங்க....ஏன்னா,"Better to have loved and lost, than to have never loved at all" ;)


1 comments:
Better to have loved and lost, than to have never loved at all
hehee..:P
mmmm mmm...nadathuppaa nadahthu..:P
Post a Comment